உலக உள நல தினத்தினை முன்னிட்டு “சகவாழ்வும் சௌஜன்யமும்” வீதி நாடகம் (படங்கள்)

0
26

உலக உள நல தினத்தினை முன்னிட்டு “இனங்களுக்கிடையில் சக வாழ்கை கட்டியெழுப்புவோம்”‘ எனும் கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம்  திங்கட்கிழமை (2022.10.10) இறக்காமம் பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஏ. இக்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளான திட்ட இணைப்பாளர் நடராஜா சுமதி, உதவித் திட்ட இணைப்பாளர் செல்பவதி கங்கேஷ்வரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வீதி நாடகத்தினை கண்டு மகிழ்ந்தனர்.

இலங்கையில் வாழும் மக்களின் உள ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு இனங்களுக்கிடையிலான சகவாழ்வும் ஒற்றுமையும் அவசியமாகும். அண்மைக்காலமாக இலங்கை சமூகத்தில் வேரூன்றியுள்ள இன அடிப்படையிலான சிந்தனையை இல்லாமல் செய்து மக்கள் மத்தியில் இன சௌஜன்யத்தை கட்டியெழுப்புவதே  இவ் வீதி நாடகம் மக்களுக்கு சொல்லும் செய்தியாக அமைந்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்