உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை: உலக வங்கி, IMF எச்சரிக்கை.

21

உலகப் பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டு மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்ஃபாஸ் நேற்று(10) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாடு அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று (10) ஆரம்பமானது. அப்போது உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்ஃபாஸ் இந்த விடயத்தினை வெளியிட்டார்.

எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர்கள், நிதியமைச்சர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் என உலகின் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் உலகளாவிய போக்குகள், வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் உதவிப் பயன்பாட்டின் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான செயற்குழு ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த ஆண்டு இலங்கை இந்த மாநாட்டில் பங்கேற்கிறது.

Join Our WhatsApp Group