உக்ரைனின் வான்படையை பலப்படுத்த ஜி07 நிதியுதவி.

0
27

ரஷ்யாவின் வான்படைப் பலத்தை தகர்க்க ஜி07 நாடுகள் அதிகளவு நிதி வழங்க இணங்கியுள்ளன. நேற்று (11) செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டம் வழமையை மீறி, மிகக் காரசாரமாக இடம்பெற்றது. உக்ரைனின் 54 நகரங்களை நோக்கி ரஷ்யா 84 ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், புதிய பதற்றம் எழுந்துள்ளது.

ஹெலிகொப்டர்கள், ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும், நவீன இராணு வ உபகரணங்கள் உக்ரைனுக்கு வழ ங்கப்படவுள்ளன. ரஷ்யாவின் இந்த செயற்பாடு, உக்ரைனுக்கு உதவும் தேவைகளை துரிதப்படுத்தியுள்ளதாக ஜி07 மாநாடு தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏவிய 84 ஏவுகணைகளில் அரைவாசியை வானிலேயே அழித்து விட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. பெப்ரவரியில் ஆரம்பமான ரஷ்ய, உக்ரைன் மோதல்களில் இதுவரை உக்ரைனுக்கு 16,8 பில்லியன் டொலர் நிதி உதவியாக வழங்கப்பட் டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்