மின் கட்டண வரி விதிப்பானது ஐம்பது வீதத்தினால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மதஸ்தலங்களுக்கு மின்சார வரி விதிப்பில் சலுகை வழங்கப்பட வேண்டும் என மத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பௌத்த உயர் பீடங்களான அஸ்கிரிய, மல்வத்த நாயக்க தேரர் களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பௌத்த விகாரைகள், இந்து ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மின் கட்டண வரி விதிப்பில் 50% மின் சலுகை வழங்கப்பட உள்ளது.