மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு –   நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

0
16

கனவரல்ல ஈ. ஜி.கே பெருந்தோட்ட பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர்,  தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நேற்று மாலை 09-10-2022  நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கனவரல்லை பெருந்தோட்டத் தொழிற்சாலையில் தொழில் செய்யும் 25 வயதான தமிழரசன் கணேசமூர்த்தி என்ற இளைஞனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நீர்க்குழாய் திருத்தச் சென்ற நபர் மிக நீண்ட நேரமாகியும் வராததால் காவலாளி சென்று பார்த்த போது, குறித்த நபர் மின்சாரம் தாக்கி கீழே கிடப்பதை அவதானித்துள்ளார். உடன் நமுனுகுலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதன்போது பசறை அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மரணத்திற்கு நீதி கோரி கனவரல்லை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 7 பிரிவிகளிலும் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் இன்று முதல் தொடர்ச்சியாக பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்  சடலம் பசறை அரச மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளை மேற்கொள்ள பதுளை அரச மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த மரணத்தை தொடர்ந்து கனவரல்லை பகுதியில் பெரும் பதற்றமும், அமைதியின்மையும் ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்