பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் 2023 மார்ச் 17ஆம் திகதி வரை வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கில், அவருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.