ஈருலகங்களின் இரட்சிப்புக்கு வழிகாட்டும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்), அகிலத்துக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடை என, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். புனித மீலாத் தின வாழ்த்துச் செய்தியிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீலாத் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தோற்றம் ஏற்படுத்திய மாற்றம் இறுதி நாள் வரைக்கும் மானிடனுக்கு நேர்வழி காட்டும்.அவரது வழி முறைகளை இஃலாசுடன் அடியொழுகி நடப்பவரே உண்மை முஃமின்களென அல்லாஹ் சாட்சி பகர்கிறான்.”
“எனவே, இயலுமானவரை நபிகளாரின் வழிகாட்டல்களை பின்பற்றி இந்நன்னாளை நாம் கௌரவிக்க வேண்டும்.மீலாத்தினம் குறித்த கருத்தபிப்பிராயங்கள் நமது ஆன்மீக நம்பிக்கைகளை காயப்படுத்தி விடக்கூடாது, இதுவே எனது நிலைப்பாடு. கருத்து பேதங்கள் அல்லது சிந்தனை வேறுபாடுகள் என்பவை நவீன சவால்களால் ஏற்படும் புதிய கருதுகோள்கள்தான்.”
“அதற்காக, ஈமானின் வேர்களையே வீழ்த்துமளவுக்கு இது உக்கிரமடையக் கூடாது. நமக்கெல்லாம் வழிகாட்ட வந்த உத்தம நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினம் சமான்யமான விடயமில்லை. இதை மனதில் கொண்டு இந்நன்னாளின் மகிமையை புரிந்துகொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.