இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தாளை இன்று இஸ்லாமியர்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள்.
இதேவேளை, உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் மார்க்கப் போதகராக விளங்கிய நபிகள் நாயகத்தின் உபதேசங்கள், முன்பை விட இன்றைய சமூகத்தில் நிலவும் சூழ்நிலையைப் போக்க உதவும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல் அமீன் ‘நம்பிக்கையாளர்’ என்ற புனைப்பெயர் கொண்ட முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த நாள், இலங்கை மற்றும் உலகளாவிய முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனையோரினதும் ஆன்மீக, சமூக முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.