அடக்குமுறையை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கூட்டு எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த பேரணி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அனைத்து வன்முறை சட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியே இன்று இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தில் தொழிற்சங்கம், பல்லினமக்கள் அமைப்பு மற்றும் அரசியற் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க மக்கள் அமைப்பின் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்டது