பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே; பாராளுமன்றப் பேரவையில் அனுமதி

0
44
  • பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று வெளிநாடு பயணம்
  • காணாமல்போன ஆட்கள் அலுவலக உறுப்பினராக ஓய்வுபெற்ற DIG

பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இன்று (08) முதல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை வெளிநாடு செல்லும் காலப்பகுதியில் பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்குப் பாராளுமன்றப் பேரவையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவியொன்றில் காணப்படும் வெற்றிடத்துக்கு ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.ஜே.கே.எஸ்.டபிள்யு. விக்ரமசிங்கவை நியமிப்பதற்குப் பாராளுமன்றப் பேரவையினால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று முன்தினம் (06) இடம்பெற்ற இந்த பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்