22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஆலோசனைகள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்துரைத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாட்டில் 20 தடவைகள் அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்திரத்தன்மை, தேசிய ஒருமைப்பாடு, ஐக்கியம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை அடைய முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டார்.