2022 A/L; தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் ஒத்திவைப்பு

0
47
  • A/L: 2023 ஜனவரி 23; புலமைப்பரிசில்: 2022 டிசம்பர் 28 பரீட்சைகள் திணைக்களம் காரணம் அறிவிப்பு 2022 க.பொ.த. உயர்தர பரீட்சைகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
  • ஒரு சில தரப்பினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இப்பரீட்சைகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2022 க.பொ.த உயர்தர பரீட்சை 2023, ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 28 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து பிரச்சினை காரணமாக, பாடவிதானங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்படாமை காரணமாக இதற்கு முன்னர், பல்வேறு தடவைகளில் இப்பரீட்சைகளின் திகதிகள் பிற்போடப்பட்டிருந்தன.

அதற்கமைய, இறுதியாக புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதியும் 2022 A/L பரீட்சை டிசம்பர் 05ஆம் திகதி முதல் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்திருந்த நிலையில், தற்போது இத்திகதிகள் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்