முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

0
24

முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் இன்று தொடங்கும் அந்த முத்தரப்பு தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இன்று கிறிஸ்ட்சர்ச்சில் மோதுகின்றன.

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-4 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

வங்காளதேசம் அணி ஆசிய கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொடர் 3 அணிகளுக்கும் முக்கியமாக கருதப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்