புதிய பிக்பாஸ் வீட்டின் தோற்றம்.. எப்படி இருக்கிறது தெரியுமா?

76

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீடு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

பிக்பாஸ் வீடு இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 6-வது சீனன் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீடு பிக்பாஸ் தமிழ் சீசன்-6 தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 9-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரமாண்ட வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சீசன் பிக்பாஸ் வீடு முற்றிலும் மாறாக ரசிகர்களை கவரும் வகையில் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் வரவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் வீடு இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 முதல் 10.30 மணி வரை மற்றும் வார இறுதி நாட்களில் இரவு 9.30 முதல் 11 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group