பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 350 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்!

0
59

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 7 நாட்களில் ரூ.350 நெருங்கி உள்ளது. பொன்னியின் செல்வன் இப்போது உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூலை மதிப்பை நெருங்கி வருகிறது. தென்னிந்திய விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான ரமேஷ் பாலா, பொன்னியின் செல்வன் 1 தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்ததாக உறுதிப்படுத்தி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்