தமிழர்களின் இரத்தத்தை குடித்த சரத் வீரசேகர ; கருணாகரன் காட்டம்!

42

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவிக்கையில்:
முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துங்கள். மாகாண சபைகள் செயல் இழந்து காணப்படுவதால் ,பல ஆக்கிரமிப்புகள் மத்திய அரசால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

தொல் பொருள் திணைக்களம் ஒரு பேய் திணைக்களம். அது தமிழ் மக்களின் சொத்துக்களை அபகரிக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் கோட்டா.
நல்லிணக்கம் பற்றி கதைக்கும் அரசு பல விடயங்களை மறந்து விட்டது.முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்,தமிழ் மக்களுக்கு இரத்தம் கொடுத்தோம் என்று. எத்தனை தமிழ் மக்களின் இரத்தத்தை வெளியே எடுத்து குடித்தார் என்று அவர் மறந்து விட்டார் என்றார்.

Join Our WhatsApp Group