காணாமல் போன குழந்தை உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் மீட்பு.

0
37

வீடொன்றிலிருந்து காணாமற்போன குழந்தை ஒன்று உரப்பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள குழந்தை ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்