பொப்பி மலர் தினம்: முதல் பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிப்பு.

25

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று (06)  பகல் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கத்தின் பொப்பி மலர் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலரை அணிவித்தார்.
 
உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கம், வருடாந்தம் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகிறது.
 
இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் குடும்பங்களின் நலன்புரிக்காக செலவிடப்படுகிறது.
 
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  லெப்.கேணல் அஜித் சியம்பலாபிட்டிய, பொருளாளர் மேஜர் பி.கே.சி. சாந்திலால் கங்காணம்கே, பொப்பி மலர் நினைவுக் குழு உறுப்பினர்களான கெப்டன் டி.எம்.எச். மடுகல்ல, ஏ.பத்மசிறி, சூலனி சிறிமெவன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group