நாளாந்த எண்ணெய் உற்பத்தியில் 02 மில்லியன் பெரல்கள் குறைப்பு

65

எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகங்களை குறைப்பதற்கு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய, நாளாந்த எண்ணெய் உற்பத்தியில் இரண்டு மில்லியன் பெரல்களை குறைப்பதற்கு “ஒபெக்” அமைப்பு இணங்கியுள்ளது. இதன் தாக்கம் மூன்று வாரங்களின் பின்னர் தெரிய வருமென பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“ஒபெக்”கின் இந்த தீர்மானத்தால் நடுத்தர, வறிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்படவுள்ளன. உலக சந்தையில் எண்ணெயின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த முடியை ஒபெக் எடுத்துள்ளது. ஏற்கனவே,120 டொலராக இருந்த ஒரு லிட்டர் எண்ணெய் தற்போது 90 டொலராக குறைந்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் “ஒபெக்”கின் இந்த முடிவை எதிர்த்துள்ளன. இதற்குப்பதிலடியாக களஞ்சியத்திலுள்ள ஒரு தொகை எண்ணெயை சந்தைக்கு விடவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இது,உலக சந்தையில் எண்ணெய்க்கான கேள்வியை சமநிலைப்படு த்தவுள்ளது.இந்த முடிவால், சவூதிஅரேபியா அதிருப்தியடைந்துள்ளது.

Join Our WhatsApp Group