குமரப்பா- புலேந்திரன் உட்பட 12 மாவீரர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு

0
25

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள், உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் அவர்களின் நினைவுத்தூபியும் உடலம் எரிக்கப்பட்ட இடமாகிய வல்வெட்டித்துறை தீருவில் நினைவுத்தூபியில் வைத்து நினைவுகோரப்பட்டது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் வேலவன் சுவாமி ஆகியோரினால் நினைவுகோரப்பட்டது. இந்த நினைவுக்கோரலின் போது, ‘இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம். இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை புலம்பெயர் தமிழர் உட்பட அனைவரும் வாக்களிக்க கூடியவாறு ஐநா கண்காணிப்பில் நடாத்த முன்வருமாறு சர்வதேச சமுகத்தை கோருகிறோம்’ என்ற பதாகை ஒன்றும் ஏந்தப்பட்டதுடன் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்