உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நேத்மி உள்ளிட்ட அணிக்கு சஜித் நிதி உதவி.

0
19

2022 பொதுநலவாய மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்குப் புகழைக் கொண்டு வந்த நெத்மி அஹிம்சா பெர்னாண்டோ வீராங்கனைக்கும்,அவருடன் இவ்வருட உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றவுள்ள வீராங்கனை சாமோத்ய கேஷானி மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர் திரு.டி.சுரங்க குமார ஆகியோருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் (04) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி ஸ்பெயினில் 17/10/2022 ஆம் திகதி முதல் 23/10/2022 திகதி வரை நடைபெறவுள்ளது.

வலையொளி இணைப்பு-

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்