உக்ரைனின் நான்கு நகரங்களை ரஸ்யாவுடன் இணைத்துவிட்டதாக புடின் (Vladimir Putin) அறிவித்திருக்கும் நிலையில், அவரது படைவீரர்கள் அவருக்கு மேலும் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலைச் செய்துள்ளார்கள்.
ரஸ்ய அதிபராகயாகிய புடின் (Vladimir Putin), உக்ரைனிலுள்ள Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால், அவரது படைவீரர்களோ வெள்ளைக் கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் வீரர்களிடம் சரண்

சமீபத்தில், Kherson பகுதிக்கு அருகிலேயே, இராணுவ வாகனம் ஒன்றில் வந்த ரஸ்யப் படையினர் சிலர், வெள்ளைக்கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடையும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் வீரர்களை நோக்கி வந்த அந்த ரஸ்ய இராணுவ வாகனத்திலிருந்து கைகளை உயர்த்தியபடி வெளியே வரும் ரஸ்யப் படையினர் உக்ரைன் வீரர்களிடம் சரணடைவதைக் காணலாம்.