இலங்கையை மட்டுமல்ல பிரான்ஸையும் வாட்டி எடுக்கும் புதிய சிக்கல்! 

48

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அதித்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருகட்ளை பெறுவதில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அந்தவகையில் எரிபொருளுக்காக மக்கள் வாரக்கணக்கில் காத்திருந்த சம்பவங்களும் இலங்கையில் நடந்தேறியிருந்த நிலையில், தற்பொது நிலமை சற்று மாறியுள்ளது.

பிரான்ஸிலும் எரிபொருள் வரிசை: இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்கள் எரிபொருளுக்காக  காத்திருந்ததுபோல  தற்போது பிரான்ஸிலும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் மக்கள் அதிகாலையில் வேலைக்கு செல்வதற்காக எரிபொருள் பெற காத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து உலகம் சற்று விடுதலையடைந்து வரும் நிலையில், ரஷ்யா – நுக்ரைன் இடையேயான போர் மக்களை எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இலங்கையை மட்டுமல்ல பிரான்ஸையும் வாட்டி எடுக்கும் புதிய சிக்கல்! (Photos) | Not Only Sri Lanka But Also France

இந்த நிலையில் இலங்கையை போல தங்களும் தற்போது எரிபொருளுக்காக வரிசையில் காத்திக்கிடப்பதாக நபர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 

Join Our WhatsApp Group