பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரச பயங்கரவாதம் வளர்கிறதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் எமது நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணை கொண்டு வருவதனை அரசாங்கமே ஊக்குவித்து வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வசந்த முதலிகே இரவு நேரங்களில் கம்பஹா, மல்வானை எனப் பல்வேறு பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. இரவு நேரத்தில் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? பகல் நேரத்தில் கொண்டு செல்ல முடியாதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.