அனைத்து வலையமைப்பினதும் புதிய கட்டணங்கள் இணைப்பு தொலைபேசி சேவைக் கட்டணங்கள், மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 2.5% இனால் மேலும் அதிகரிக்கப்படுவதாக, தொலைபேசி வலையமைப்பு சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
2022 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்புச் சட்டம் (SSCL) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று முதல் அமுலுக்கு வருவதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதற்கமைய, தொலைத்தொடர்பு மற்றும் கட்டண சேவை தொலைக்காட்சி (Pay TV) சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (05) முதல் திருத்தப்பட்டுள்ளதாக, பொதுமக்களுக்கு தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.