முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

29

குயின்ஸ்லாந்து: டி20 உலகக்கோப்பை தொடர் வரும்16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களை, போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிகோலஸ் பூரன் தலைமை தாங்குகிறார்.

இரு அணி வீரர்கள் விவரம்:-

ஆஸ்திரேலியா:- ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் மில்லர், டிம் டேவிட், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், சீன் அப்போட், கேமரூம் க்ரீன், டேனியல் சாம்ஸ், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸ்லேவுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

வெஸ்ட் இண்டீஸ்:- ரோவ்மன் பவல், பிரண்டன் கிங், எவின் லீவிஸ், கைல் மேயர்ஸ், யான்னிக் கேரியா, ஜேசன் ஹோல்டர், ரெய்மான் ரெய்பர், நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்டெரல், அகெல் ஹோசன், அல்சாரி ஜோசப், ஓபெட் மெக்காய், ஒடெய்ன் ஸ்மித்.

Join Our WhatsApp Group