வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்த தொடருக்கான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ்- ஜான்சன் சார்லஸ் களமிறங்கினர்.
2-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டை இழந்தது. 2 பந்துகளை சந்தித்த அவர் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கிங் 12 ரன்னில் ஹசில்வுட் பந்தில் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய கைல் மேயர்ஸ் 36 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் முறையில் வெளியேறினார்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பூரன் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த வீரர்கள் ரெய்மான் ரெய்பர் 19, பவல் 7, ஹோல்டர் 13 என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தனர்.
அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கிறது.