முடிவை மாற்றிக் கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர்.. விவாகரத்து ரத்து?

0
58

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்த்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார்.

சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் விவாகரத்தை முடிவை ரத்து செய்து மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பலர் ஆர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்