மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம் : வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.

0
23

மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து, பெருமளவிலான பணத்தை பெற்று, அவ்வாறான நபர்களை மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்காக செல்வதைத் தவிர்க்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது, மலேசியாவிலுள்ள சட்டத்தின்படி, நாட்டிற்குள் நுழைந்த பின்னர் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க, 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மலேசிய அரசாங்கம் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்