பாவனைக்கு உதவாத அரிசியை பதுக்கி வைத்திருந்த இரு களஞ்சிய சாலைகளுக்கு சீல்.

28

பேருவளையில் பாவனைக்கு உதவாத 590 கிலோகிராம் சம்பா அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த இரு அரிசி களஞ்சியசாலைகளுக்கு நேற்று (04) சீல் வைப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பேருவளை பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, பொது சுகாதார பரிசோதகர்கள் பேருவளை பொலிஸாருடன் இணைந்து பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தர்காநகரை வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.

Join Our WhatsApp Group