கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது.
சமீபத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ‘டொயோட்டா வெல்ஃபையர்’ சொகுசு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு ‘ராயல் என்ஃபீல்ட்’ பைக்கையும் நடிகர் கூல் சுரேஷிற்கு ஐபோனையும் பரிசளித்தார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடலின் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.