8000 ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு புதிதாக நியமனம் – கல்வி அமைச்சர் சுசில்

0
34

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 8000 பேரை ஆட்சேர்ப்பு செய்யப் போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பதவிகளுக்காக பயிற்சிகளை பெற்றவர்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

மாகாண மட்டத்தில் இந்த நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர், அபிவிருத்தி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
நியமனம் பெறும் இந்த ஆசிரியர்கள், தேசிய கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா கற்கை நெறியை மூன்றாண்டுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்