2022 ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: கிரிக்கெட் அருங்காட்சியகத்தில்

93

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் (SLC) வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் துபாயில் பாகிஸ்தானை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் 2022 ஆண்களுக்கான ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இலங்கை வென்றது.
இந்நிலையில், இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக குறித்த கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்  அருங்காட்சியகத்தில் வைத்துள்ளதான  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை இதுவரை 6 ஆசிய கோப்பை கோப்பைகளை வென்றுள்ளது. 2022 கோப்பையுடன், 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பைகளையும் இலங்கை வென்றுள்ளது. குறித்த அனைத்து ஆசிய கோப்பை கோப்பைகளும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கொழும்பு 07 இல் உள்ள Maitland Crescent இல் உள்ள அதன் அருங்காட்சியகம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்தள்ளமை குறிகப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group