பொன்னியின் செல்வன் 4 நாட்களில் ரூ.250 கோடியை தாண்டி வசூல்

0
49

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் ரூ.250 கோடியை தாண்டி உள்ளதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ 78.29 கோடி வசூலித்தது. இரண்டாவது நாளில் ரூ.60.16 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.64.42 கோடியும் வசூலித்தது, மேலும் நான்காவது நாளில் ரூ.47 கோடி வசூல் செய்து மாபெரும் வசூலை ஈட்டியது.

இதன்மூலம் முதல் வார இறுதியில் உலகளவில் ரூ.250 கோடியை வசூலித்தது – இது ஒரு பெரிய சாதனையாகு. பொன்னியின் செல்வன் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.86 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் ரூ.21.34 கோடியையும், மூன்றாவது நாள் ரூ. 22.51 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. நான்காவது நாளான நேற்று ரூ.13.08 கோடியுடன் மொத்தம் இதுவரை நான்கு நாட்களில் ரூ.82.79 கோடியை படம் வசூலித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்