இறக்குமதிக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படாத நிலையில், 40,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயுடன் இரண்டு கப்பல்கள் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் தரித்து நிற்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், முன்னதாக வந்த கப்பலில் இருந்து 37,000 மெற்றிக் தொன் பெற்றோல் நேற்று (3) இறக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 11,000 மெற்றிக் தொன் ஜெட் எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.