மஹரகம நகரிலிருந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர், மஹரகம பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயிருந்தமை தொடர்பில் மஹரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கொஹுவல பிரதேசத்தில் ஒருவர் காணாமல் போன மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்வதை முறைப்பாட்டாளர் கண்டுள்ளதுடன், மஹரகம பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் பிரகாரம், மஹரகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொஹுவல பொலிஸாருக்கு அறிவித்து, உடனடியாக குறித்த நபருடன் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளனர்.