Litro சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் குறைப்பு.

55

** ஒக்டோபர் 05ஆம் திகதி நள்ளிரவு அமுல்

விலைச் சூத்திரத்திற்கு அமைய, Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. Litro நிறுவன தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை (05) நள்ளிரவு முதல்  லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால்,எத்தனை ரூபாயினால் விலை குறைக்கப்படும் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை.

இதேவேளை, இறுதியாக கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg – ரூ. 113 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 4,551)
  • 5kg – ரூ. 45 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 1,827)
  • 2.3kg – ரூ. 21 இனால் குறைப்பு (புதிய விலை ரூ. 848)
Join Our WhatsApp Group