ஹட்டனில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்து பாரிய சேதம் : இருவர் காயம்.

0
22

மத்திய மலைப்பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பாரிய மரம் ஒன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளதுடன், வீடு ஒன்றும் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக அட்டன் காமினிபுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03.10.2022) அதிகாலை 1.30 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த வீட்டில் வசிப்பவர்கள் பாரிய மரம் முறிந்து வீழ்ந்த போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், மரம் முறிந்து விழுந்ததில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்