மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகளுக்கு ரூ.25,000 நிதியுதவி
( படங்கள்)

12

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, இன்று (03.10.2022) உயிரிழந்த 46 வயதுடைய  மூன்று குழந்தைகளின் தாயான இராமசாமி காளியம்மாவின் இறுதிக் கிரியைகளுக்காக, நுவரெலியா மாவட்ட  அனர்த்த நிவாரண  நிலையம் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 25,000 ரூபாய் பணம், உயிரிழந்த பெண்ணின் கணவனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச செயலாளர்  விதுர சம்பத் மற்றும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் ஆகியயோர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் குடும்பத்தாரிடம்  25 ஆயிரம் ரூபாய் பணத்தை   கையளித்துள்ளனர்.

முதற்கட்டமாக உயிரிழந்த தாயின் இறுதி கிரியைகளுக்காக. 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கிய பின்னர் 75,000  ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன்  மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குறித்த வீட்டின் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்று, அதற்கான இழப்பீடை வழங்கவும்   நடவடிக்கை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group