மட்டு உன்னிச்சை குளத்தில் நீராடிய இருவர் உயிரிழப்பு.

0
15

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தில் 9 பேர் கொண்ட நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடிவருவதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் 35 வயதுடைய மனோகரன் கண்ணதாசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 17 வயதுடைய விஷ்ணுகாந் விதுஷனன் காணாமல் போயுள்ளார்.

நண்பர்களுடன் உன்னிச்சை குளத்தில் நீராடுவதற்காக சம்பவதினமான நேற்று மாலை சென்று அந்த பகுதியில் உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு குளத்தில் நீராடிபோது 17 வயது சிறுவன் நீரில் மூழ்கியதையடுத்து, அவரை காப்பாற்றுவதற்காக 35 வயதுடைய நபர் குளத்தில் குதித்த நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் நீரில் மூழ்கிய 17 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்