பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் வெளியானது..!

32

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இன்று இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்றொரு புறம் கிராபிக்ஸ் காட்சிகள் கவரும் வகையில் இல்லை என்று இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group