தேசிய சபைக்கு நியமிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறித்து தயாசிறி எம். பி

19

தேசிய சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 8 ஆம்  வகுப்பைக் கூட சித்தியடையாத முட்டாள்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் இடமாக தேசிய சபை இருந்தால், அத்தகைய இடத்தில் படித்த மற்றும் புத்திஜீவிகளைக் கொண்ட குழு இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

“தேசிய சபைக்கு நியமிக்கப்பட்டவர்களை நான் பார்த்தேன். தேசிய சபை  என்பது இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் இடமாகும். அந்த இடத்தில் படித்த, அறிவுள்ள புத்திஜிவிகளை நியமிக்க வேண்டும். பொதுஜன பெரமுனவில் அப்படியானவர்கள் இல்லை.

இதனால்  சில முட்டாள்களையே தேசிய சபைக்கு நியமித்துள்ளனர். அமெரிக்காவிலிருந்தே கட்டுப்படுத்த முடியும் என்பதே அதற்குக் காரணம். ரிமோட் அவர் கையில் உள்ளது என  தெரிவி்த்துள்ள அவர் இந்த அரசாங்கம் நிதிகளை தேவையற்ற விதத்தில் செலவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்

Join Our WhatsApp Group