சர்வதேச திறந்த கராத்தே போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி சாதனை (படங்கள்)

0
25

இலங்கைக்கான சர்வதேச தற்காப்புக் கலைச் சங்கம் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சிறுவர் தினத்தில் நடாத்திய போட்டியில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யைச்சேர்ந்த 13 மாணாக்கர்கள் ஜப்பான் கராத்தே – தோசோட்டோகான் பயிற்சிக் கழகத்தின் (JKSSA) சார்பாக கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் காத்தா(Kata))மற்றும் சண்டை(Kumite)ஆகிய இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு அதிகூடிய 18 பதக்கங்களை தம் வசப்படுத்திக்கொண்டனர்.

இதில், காத்தா மற்றும் சண்டை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட ந.நியோகிறிஸ்மன், ம.மனோஷ், பா.யுனித், சு.மதுர்ஷினி,சு.டென்சிக்கா ஆகியோர் எட்டு தங்கப்பதக்கங்களையும் ச.நோயல் றிதுஷன்,உ.கேசோபன், த.டிதுர்ஷன், றா.சிலோசிக்கா, சு.டென்சிக்கா ஆகியோர் ஆறு வெள்ளிப்பதக்கங்களையும் சு.அகோஸிதன், ந.நியோகிறிஸ்மன், ச.நோயல் றிதுஷன் அகிய வீரர்கள் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களை வாழைச்சேனைப் பிரதேசத்தைச்சேர்ந்த பயிற்றுவிப்பாளர் ‘சென்சி’.த.சதானந்தகுமார் (ரங்கன்:Black Belt 2nd Dan,1st Dan – SLKF) பயிற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்திய மாணவர்களும் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், அவர்களையும் வெற்றிகொண்டு இந்தக்கல்லூரி மாணாக்கர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது பாராட்டப்படவேண்டியதாகும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்