இலங்கைத் தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ஒப்பம்

27

பாராளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட “இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

1982ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தின் ஊடாக சட்டத்தின் மூன்றாவது பிரிவு திருத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உள்ளடக்கம் (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) மாற்றப்படுகிறது. இதற்கமைய 2022ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்த) சட்டம் என்ற பெயரில் இத்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

Join Our WhatsApp Group