மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை!

13

** சொந்த ஊரான ரக்வாணையில் நடத்த ஏற்பாடு

மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை மாலை அவரது சொந்த ஊரான ரக்குவானையில் நடைபெறவுள்ளது. அவரது உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (02) காலை காலமானார்.
காலை 6.30 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தர்ஷன் தர்மராஜ் இறக்கும் போது அவருக்கு வயது 41. சரோஜா, பிரபாகரன், மச்சாங், மாதா, இனியவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், பல சிங்கள நாடகங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிகவும் பிரபலமான “சுனாமி” திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் இன்னும் 05 நாட்களில் திரையிடப்படவுள்ள “பிராண” படத்திற்கும் தனது நடிப்பில் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

Join Our WhatsApp Group