இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் இன்று காலை காலமானார் என குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இறக்கும் போது இவருக்கு வயது 41.
திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது இவரின் உயிர் பிரிந்ததாக தெரியவருகிறது .
சிங்கள திரைப்படத்துறையிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் கொடி கட்டி பறந்த தமிழர் இவர். இவரது சிறந்த நடிப்புக்காக பல்வேறு தேசிய விருதுகளை பெற்ற புகழ்பெற்ற கலைஞர் இவர்.
இவருடைய இழப்பு இலங்கை மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கள,தமிழ் கலைஞர்கள் இவரது இழப்புக்கு அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.