தவறுக்கு மன்னிப்பு கோரினார் நாமல்

60

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய தீர்மானித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

திகாமடுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்திருந்த முடிவுக்கு கட்சி என்ற முறையில் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group