ஜெனிவாவின் புதிய பிரேரணை; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அதிருப்தி : ஏற்கவே முடியாது என அலி சப்ரியும் தெரிவிப்பு

0
14

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தமக்கு மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும் இந்தப் பிரேணை பூகோள அரசியலுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் செயலாளர் லீலாதேவி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் நிலையில் புதிய பிரேரணை குறித்து லீலாதேவி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு தாம் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்ற போதிலும் அது பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜெனிவா குழுவுக்கு தலைமை தாங்கி சென்ற அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவிக்கும் போது ; இலங்கை மீது கொண்டுவரப்படும் இந்தப் பிரேரணையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.” இலங்கை அரசாங்கம் இதனை முழுமையாக நிராகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, பொறுப்பு கூறுவதற்காக உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்படும் ; நீடித்து நிலைக்கும் இந்த தேசிய பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதில் அரசாங்கம் திட சங்கர்ப்பம் கொண்டுள்ளது என்றும் கூறினார். புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்