சிகரட்டுக்களின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

15

கோர்லிப் ரக சிகரெட் மற்றும் ‘பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்’ சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கோர்லிப் சிகரெட் ஒன்றின் புதிய விலை 85 ரூபாவாகவும், ‘பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்’ சிகரெட்டின் புதிய விலை 90 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டம் நேற்று (01) முதல் அமுல்படுத்தப்படுவதே இந்த சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, நிறுவனத்தின் ஏனைய சிகரெட் தயாரிப்புகளான Captain, Bristol மற்றும் Dunhill போன்றவற்றின் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group