சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மஸ்கெலியாவில் இலவச மருத்துவ முகாம்

0
8

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் 01.10.2022 அன்று மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
 
சிறுவர் மற்றும் முதியோருக்கு வைத்திய முகாம், மூக்கு கண்ணாடி வழங்குதல், காது சிகிச்சை முகாம் போன்றன ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், சிறுவர்கள் மகிழும் வகையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றது.
 
மஸ்கெலியா கம்பனியின் கீழ் இயங்கும் 10 தோட்டங்களில் உள்ள சிறுவர் மற்றும் பெரியவர்கள் என சுமார் 700 பேர் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமில் பயனடைந்தனர்.
  
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விக்கு மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிகாரி நிலுஷன் ஜெயவீர, தோட்ட அதிகாரி, மருத்துவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்